சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு | 'கருப்பு': இந்திய அளவில் முதல் 100 கோடியைப் பெற்ற சூர்யா | அண்ணனின் கள்ளக்காதலை தடுக்கும் சகோதரிகள் : பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர் தொடரின் கதை | துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் கோமலி பிரசாத் | 2026ல் அதிகப் பார்வைகளைப் பெற்ற 'முட்ட கலக்கி' பாடல் | ராம் பொதினேனி இயக்கும் படம் எந்த மாதிரியான கதை |

பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான தி ராஜா சாப் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மாருதி இயக்கி உள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் சர்ப்ரைஸ் ஆக, கதைக்கு வலுவான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்துள்ளார்.. இது ஒரு ஆச்சரியம் என்றால் நடிகர் சஞ்சய் தத்துக்கு இவர் ஜோடியாக நடித்துள்ளார் என்பது இன்னொரு அதிர்ச்சி தரும் ஆச்சரியம்.
அதேபோல நடிகை கயல் ஆனந்தியும் இந்த படத்தில் பிரபாஸின் அறிமுக பாடலில் ஒரே ஒரு பிரேம் மட்டும் வந்து செல்கிறார். அந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனம் ஆடி இருப்பாரோ என்று நினைத்தால் அதெல்லாம் இல்லை.. வெறும் இரண்டு நொடி காட்சிகளில் மட்டுமே தோன்றி மறைந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கயல் ஆனந்தி. எந்த விதமான அடிப்படையில் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.