ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரிக்கும் படம் 'ஹேப்பி ராஜ்'. மரியா இளஞ்செழியன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடிக்கிறார். ஜார்ஜ் மரியம், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோபா பாய் ரசூல் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றி உள்ளனர். இந்த படத்தின் மூலம் அப்பாஸ் ரீஎண்ட்ரி ஆகிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் மரியா இளஞ்செழியன் கூறும்போது "படத்தை திட்டமிட்டப்படி முடித்துள்ளோம். இந்த படம் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ஒரு ஆரோக்கியமான, நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். நம்பிக்கை, லேசான உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டாடும் தொடர்புடைய தருணங்களை நினைவூட்டும் படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் இதுவரை நடித்திராக ஹேப்பி ராஜ் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது" என்றார்.