ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? | மே 29ல் ஓடிடி.,யில் வெளியாகும் ‛லீடர்' | சக்தி வாய்ந்த வேடம்: ‛பெத்தி' படம் குறித்து சிவராஜ் குமார் தகவல் | கார்த்தி 49வது பிறந்தநாளில் வெளியான 'சர்தார்-2, மார்ஷல்' பட போஸ்டர்கள்! | வாழை 2 படம் குறித்து புதிய தகவல் | பஹத் பாசில், பிரேம் குமார் பட படப்பிடிப்பு துவங்கியது | 34 வருடங்களுக்கு பிறகு இணையும் கூட்டணி | அருண் விஜய், மிஷ்கின் புதிய கூட்டணி |

நடன இயக்குனர் ஜீவா, திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் ஆகியோரின் மகள் சாயதேவி. 'கன்னிமாடம்' படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு சார், பரமசிவன் பாத்திமா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம் 'அலப்பறை'. இதில் அவருக்கு ஜோடியாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். சி.எஸ்.காளிதாசன் இயக்கியுள்ளார்.
பி.எல்.தேனப்பன், 'யார்' கண்ணன், நமோ நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், தம்பி சிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன் குமார், வேல்குமார் நடித்துள்ளனர். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்ய, அபி ஜோஜோ இசை அமைத்துள்ளார். (சபேஷ்) முரளி பின்னணி இசை அமைத்துள்ளார். சிஎஸ்கே சினிமா தயாரித்துள்ளது.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது "அரசியல் இல்லாமல் ஆன்மிகம் இல்லை, ஆன்மிகம் இல்லாமல் அரசியல் இல்லை. இரண்டும் கலந்து இருப்பதுதான் யதார்த்தம், இந்த கருத்தை அழகான காதலோடு, நல்ல திரைக்கதையோடு சொல்லும் படம். படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு கொண்டு வருகிறோம்" என்றார்.




