தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம்பிரபு, அக் ஷய் நடித்த சிறை படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய வசூல் இல்லாவிட்டாலும் 10 கோடி வசூலை தொட்டுள்ளதாக தகவல். சின்ன பட்ஜெட் படம் என்பதாலும், படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதாலும் தயாரிப்பாளர் ஹேப்பி. இதற்கிடையே, படத்தை இன்னும் விளம்படுத்த தமிழ்நாடு இயக்குனர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு தனி ஷோ போடப்பட்டுள்ளது. அதில் படம் பார்த்தவர்கள் படத்தை பாராட்டினர். அடுத்ததாக முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தனி ஷோ போடப்படுகிறது. அதை பார்த்துவிட்டு அவர்களும் கருத்து தெரிவிக்க உள்ளனர். இன்னமும் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தை பார்த்தார்களா என்பது கேள்வி குறியாக உள்ளது. இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் சிறையை பாராட்டிய நிலையில், சக ஹீரோக்கள் படத்தில் நடித்தவர்களை, படத்தை பெரியளவில் பாராட்டவில்லை. தயாரிப்பாளர் லலித் மகன் அக் ஷய் படத்தில் 2வது ஹீரோவாக நடித்துள்ளதால் படத்தை அவர் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வருவதாகவும் தகவல்.




