கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா | ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் |

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆனந்தினி பாலா இயக்கத்தில் ரேச்சல் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். பாபு ராஜ், வினீத் தட்டில், ரோஷன் பசீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இறைச்சி வெட்டும் பெண்ணாக ரேச்சல் நடித்துள்ளனர். ஆக் ஷன் நிறைந்த பழிவாங்கல் கதையாக உருவாகி உள்ளது. இப்படம் இம்மாதம் வெளியாக வேண்டியது. சில பிரச்னையால் வெளியாகவில்லை.
இந்நிலையில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ‛‛சரியான நேரம் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளோம்'' என தெரிவித்துள்ளனர். அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள் குறிப்பிடவில்லை. இம்மாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.