'திருமணம்' படத்துக்கு விருது இல்லை: இயக்குனர் சேரன் ஆதங்க பதிவு | இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகும் உயிர் உள்ளவரை உஷா | சந்தானத்தின் புதிய படம் பற்றிய தகவல் | மீண்டும் இணைந்த ‛ரவுடி பேபி' கூட்டணி | மமிதா பைஜூக்கு போட்டியா அனஸ்வரா ராஜன் | நம்பிக்கையுடன் காத்திருக்கும் நயன்தாரா | அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? |

சென்னை : வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிச.,04) காலமானார். அவருக்கு வயது 86.
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநர் ஏவிஎம் சரவணன்,86. இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் இன்று வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏவிஎம் சரவணன் நேற்று தான் தனது 85வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.