சத்யன் அந்திக்காடு உடன் மீண்டும் இணைந்த மோகன்லால் | 18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை | என் தந்தையையும் சட்டையை கழற்ற வைத்தார் சல்மான் கான் ; நடிகர் வருண் தவான் தமாஷ் பேச்சு | நடிகர் சங்கத்தின் ஒற்றுமைக்காக மம்முட்டி, மோகன்லால் தலையிட வேண்டும் ; பிரித்விராஜ் அம்மா கோரிக்கை | அல்லு அர்ஜுன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வீரர் | ராஜினாமா செய்த திரிஷ்யம் நடிகை பகிரங்க குற்றச்சாட்டு ; நடிகர் சங்கத்திற்குள் சலசலப்பு | முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா? | தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார் | ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு |

'மிடில் கிளாஸ் பேமிலியை' மையமாக கொண்ட படங்களில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கலாம், மினிமம் கியாரண்டி இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த 'மிடில் கிளாஸ், குடும்பஸ்தன், பார்க்கிங்' போன்ற படங்கள் அமைந்தன.
அந்தக் காலத்திலும் மிடில் கிளாஸ் பேமிலி படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அதில் முக்கியமானது 'முதல் தேதி' என்கிற படம். இந்த படம் 'பஹலி தாரிக்' என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக். இதனை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ப.நீலகண்டன் இயக்கினார்.
தமிழ் பதிப்பில் சிவாஜி கணேசன், அஞ்சலிதேவி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், 'குலதெய்வம்' ராஜகோபால், 'ஜெயக்கொடி' கே.நடராஜன், கே.டி. சந்தானம், ஆர்.பாலசுப்ரமணியம், முஸ்தபா, சி.வி.வி. பந்துலு, 'யதார்த்தம்' பொன்னுசாமி பிள்ளை, தசரதன், டி.ஆர். நடராஜன், வி.கே. ஆச்சாரி குண்டுமணி, குமாரி சுசீலா, பேபி உமா, சாரதாம்பாள் கிருஷ்ணவேணி ஆகியோர் நடித்தனர்.
சிவாஜி நடுத்தர வர்க்க குடும்பஸ்தன். குறைந்த சம்பளத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றி வருவார். அவரது மனைவி அஞ்சலி தேவி, நண்பன் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
ஒரு நாள் சிவாஜி பணியாற்றிய வங்கி, திவாலாகி விடும். இதனால் வேலை இழக்கும் சிவாஜி குடும்பத்தை நடத்த கஷ்டப்படுவார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்வார். அவரது ஆவி எமதர்மராஜன் முன் நிற்கும். இன்னும் ஆயுள் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சிவாஜியை பார்த்து சினம் கொள்ளும் எமன் "மீண்டும் பூமிக்கு சென்று நீ தற்கொலை செய்து கொண்டதால் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்த்து வா" என்று அனுப்பி வைப்பார்.
சிவாஜி பூமிக்கு வருவார், குடும்பம் வறுமையில் தவிக்கும், மகள் சிலரால் பலாத்காரம் செய்யப்படுவாள், மகன் திருடனாக மாறுவான், இப்படி பல விஷயங்கள் நடக்கும், சிவாஜி ஆவி என்பதால் அதை பார்க்கத்தான் முடியுமே தவிர அவரால் எதுவும் செய்ய முடியாது. தான் தற்கொலை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவர் உணரும்போது சிவாஜி விழித்துக் கொள்வார். ஆம்... தற்கொலை எண்ணத்துடன் தூங்கச் சென்ற சிவாஜி கண்ட கனவுதான் படத்தின் திரைக்கதை.




