ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பாலிவுட்டில் கடந்த 30 வருடங்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் சுனில் ஷெட்டி. கடந்த 20 வருடங்களுக்கு முன்பே தமிழில் ஜீவா இயக்கத்தில் வெளியான '12 பி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் அவர் தென்னிந்திய படங்களில் நடிக்கவில்லை.
கடந்த 2020ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தார் சுனில் ஷெட்டி. அந்த படம் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து தென்னிந்திய படங்களில் சுனில் ஷெட்டி தொடர்ந்து நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் எந்த ஒரு தென்னிந்திய படத்திலும் அவர் நடிக்கவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, “தென்னிந்திய படங்களில் எப்போதுமே பாலிவுட் ஹீரோக்களை அழைத்துச் சென்று வில்லனாகவே காட்ட முயற்சிக்கின்றனர். பாலிவுட் ஹீரோக்களை மிகப்பெரியவனாக காட்டினாலும் வில்லனாகவே அவர்களை காட்ட விரும்புகின்றனர். குறிப்பாக அங்குள்ள ஹீரோக்களின் மாஸ் இமேஜை தூக்கி நிறுத்துவதற்காகவே இங்குள்ள ஹீரோக்களை அங்கே அழைக்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறியுள்ளார்.




