மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரவி கிரண் கோலா என்பவர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா என்ற படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வருகிறது. இதேநாளில் ஹிந்தியில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மெயின் என்ற படமும் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் தற்போது ரிவால்வர் ரீட்டா படத்தின் ப்ரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் கீர்த்தி சுரேஷ், தனுஷ் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவ கூறுகையில், தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள தனுஷை நான் வியப்புடன் பார்த்து வருகிறேன். அவரிடத்தில் ஒருமுறை, உங்களது இந்த திரையுலக பயணத்தை ஒரு புத்தக வடிவில் ஆவணப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் தனுஷ் அதை மறுத்து விட்டார். அப்படி செய்வது எனது வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயலாகிவிடும் என்று கூறினார். அவரது இந்த தெளிவான பேச்சும் அவர் மீது ஆச்சர்யத்தை கொடுத்தது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.




