தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

பாலிவுட் நடிகை நீது சந்திரா, தமிழில் 'யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், திலகர், சிங்கம் 3, வைகை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த இவர் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்டவர், கட்சி சார்பின்றி விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் நீது சந்திரா சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நீது சந்திராவை தூதர் பொறுப்பில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது.
இது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நீது சந்திராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தேர்தல் நடைமுறையின்போது சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நீங்கள் கருத்து தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இது உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கு எதிரானது. எனவே தேர்தல் கமிஷன் தூதர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்" என குறிப்பிட்டுள்ளது.




