‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு | 'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் |

ரஜினி நடிப்பில் 'அருணாச்சலம்' என்ற படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. குடும்பப்பாங்கான காமெடி கலந்த கதையில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் சுந்தர்.சி அளித்துள்ள ஒரு பேட்டியில், அருணாச்சலம் படத்தை அடுத்து மீண்டும் ரஜினியை இயக்கப் போகிறீர்கள். இதேபோன்று அன்பே சிவம் படத்தை அடுத்து கமல்ஹாசனையும் இயக்குவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தை பார்த்த பிறகு தான் சினிமாக்கு வர விரும்பினேன். அதே போல் அவர் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை பார்த்த பிறகு தான் திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.
அப்படி யாரால் சினிமாவுக்கு வந்தேனோ அதே கமல்ஹாசனை வைத்து 'அன்பே சிவம்' என்ற படத்தை இயக்கினேன். இப்போது அவரது தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்குகிறேன். இப்படி மீண்டும் ரஜினி படத்தை இயக்குவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது போன்று மீண்டும் கமலை வைத்து நான் படம் இயக்குவதற்கான வாய்ப்பு அமையலாம். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது அந்த படத்தையும் மிகச் சிறப்பாக இயக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார் சுந்தர்.சி. மேலும், ரஜினி 173வது படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச்சில் தொடங்கப்பட்டு 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.




