சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் |

இயக்குனர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு உட்பட பல படங்களில் நடித்தார். பண்டிகை பட இயக்குனர் பெரோசை திருமணம் செய்தார். இப்போது சற்றே இடைவெளிக்குபின் மிடில் கிளாஸ் படத்தில் முனிஸ்காந்த மனைவியாக நடித்துள்ளார்.
இது குறித்து விஜயலட்சுமி கூறுகையில் 'ஒரு மிடில்கிளாஸ் குடும்பத் தலைவியாக, ஒரு குழந்தை அம்மாவாக நடித்துள்ளேன். மிடில்கிளாஸ் குடும்பங்களின் கனவு, பொருளாதார நிலை, யூடியூப் மோகத்தை கதை பேசுகிறது' என்றார்.
இயக்குனர் பேசுகையில் 'இது குடும்ப, காமெடி படம் மாதிரி தெரிந்தாலும் ஒரு கட்டத்தில் திரில்லர் பாணிக்கு நகரும். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ராதாரவியும். ஒரு முக்கியமான வேடத்தில் வேல.ராமமூர்த்தியும் நடித்துள்ளனர். மாளவிகா அவினாஷ் சின்ன ரோலில் நடிப்பதில்லை என்று மறுத்தார். பின்னர், கதை கேட்டு நடித்துக் கொடுத்தார். பல படங்களில் காமெடியனாக இருந்த முனிஸ்காந்த் இதில் கதைநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு சொந்த ஊரில் நிலம் வாங்கி, செட்டில் ஆக ஆசை. ஆனால், சிட்டியில் சிறப்பாக வாழ நினைக்கிறார் விஜயலட்சுமி. அவர்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லியிருக்கிறோம். மரகதநாணயம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த ஆக்சிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது' என்றார்.