பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா |

சென்னையில் நடந்த ஆட்டோகிராப் பட விழாவில் 4 ஹீரோயின்களில் சினேகா மட்டும் கலந்து கொண்டார். நடிகை கோபிகா வெளிநாட்டிலும், மல்லிகா வெளி மாநிலத்திலும் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை. நடிகை கனிகா சென்னையில் இருந்தும் ஏனோ வரவில்லை. ஆனால், நடிகை சினேகா ஆர்வமாக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் ''ஆட்டோகிராப் படம் பார்த்துவிட்டு ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்க முடியுமா என்று அந்த காலத்திலேயே கேட்டார்கள். நான் முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன். இன்றும் சேரனும் நானும் நட்பாக இருக்கிறேன். நான் நடித்த படங்களில் ஆட்டோகிராப் சிறந்த படம். குறிப்பாக, ஒவ்வொரு பூக்களிலும் பாடல் அவ்வளவு பிடிக்கும். அந்த பாடலில் எப்படி நடிக்க வேண்டும் என நிறைய சொல்லிக் கொடுத்தார் சேரன். அந்த படம் முடிந்தவுடன் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கணவன் மனைவியாக நடித்தபோது, நாம நண்பர்கள், அப்படி நடிக்க முடியுமா என்று கேட்டார் சேரன். அதை மீறி நல்ல படங்கள் பண்ணினோம். இந்த படம் ரீ ரிலீஸ் என்று தெரிந்தவுடன் என் அப்பா படம் பார்க்க ஆசைப்பட்டார்.
நான் சேரனிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு எத்தனை காதல் பாதிப்பு இருந்தது. அது நிறைய இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றார்.
இதற்கு தனது பேச்சில் பதில் அளித்த சேரன். ‛அது பற்றி இப்ப பேச முடியாது. நேரமாகிவிட்டது. இன்னொரு மேடையில் ஒரு நாள் முழுக்க பேசுவோம்' என்று எஸ்கேப் ஆனார்.




