மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா | துல்கர்-கல்யாணி வசனம் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; கேரள போலீஸ் பலே ஐடியா |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛குட் பேட் அக்லி' படத்தில் நடித்த அஜித் குமார், மீண்டும் அவர் இயக்கும் தனது 64வது படத்திலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை இம்மாதம் வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் அஜித் மேலும் இரண்டு மாதம் டைம் கேட்டதால் தற்போது படப்பிடிப்பை ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில் அஜித் குமாரும் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதனால் அஜித் 64வது படத்தின் அறிவிப்பு தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி இம்மாதமே அப்படத்தின் அறிவிப்பை வெளியிட ஆதிக் ரவிச்சந்திரன் தயாராகி வருகிறார். அதோடு நவம்பரில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த அவர், தற்போது படப்பிடிப்பு ஜனவரிக்கு மாறி விட்டதால் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு அஜித் 64வது படத்தை வெளியிடுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.