பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்திய சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமானது. இரண்டு பாகமாக படம் வெளிவந்தது. தற்போது இந்த இரண்டு பாகங்களையும் ஒருங்கிணைத்து 'பாகுபலி: தி எபிக்' என்ற பெயரில் வெளிவந்தது.
இதில் தமன்னாவின் காதல் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமன்னாவின் கேரக்டர், இரண்டாவது பாகத்தில் அட்மாஷ்பியர் ஆர்ட்டிஸ்ட் ரேன்ஞ்சுக்கு குறைக்கப்பட்டது, அப்போது விமர்சிக்கப்பட்டது. தற்போது 'பாகுபலி தி எபிக்' படத்தில் தமன்னாவின் காட்சிகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியிருப்பதாவது, 'பாகுபலி' படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ரீதியாகவும், கதை ரீதியாகவும் முக்கியமானது. ஆனால், புதிய பதிப்பு முற்றிலும் கதை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். முதலில் எடிட்டிங் செய்தபோது 4 மணி, 10 நிமிடங்கள் இருந்தது. சினிமா மற்றும் மற்ற துறையிலுள்ள பார்வையாளர்களுக்கு சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்தோம். அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் அதை 3 மணி, 43 நிமிடங்களாக குறைத்தோம். இதனால் தமன்னா, பிரபாஸ் காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் நீக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது" என்றார்.




