தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன் | அம்மா மாதிரி வருவேன்: குஷ்பு மகள் நம்பிக்கை | 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன் | பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம் | பிளாஷ்பேக்: ஓட்டல் நடத்திய முதல் நடிகர் | 'தாய் கிழவி'யைப் பார்க்க பெண்கள் வருவார்களா? | பிளாஷ்பேக்: ஆர் எம் வீரப்பனால் இயக்குநர் என்ற இலக்கை எட்டிப்பிடித்த ஏ ஜகந்நாதன் | 'கேஜிஎப் 2' டீசர் 279 மில்லியன் : 'டாக்சிக் டீசர் 100 மில்லியனாவது கடக்குமா ? | 8 வார ஓடிடி இடைவெளி; தெலுங்கு திரையுலகம் ஆலோசனை | ‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' |

கடந்த 2001ம் ஆண்டில் விஜய், சூர்யா இணைந்து நடித்த படம் ப்ரண்ட்ஸ். இவர்களுடன் தேவயானி, ராதாரவி, வடிவேலு, சார்லி, மதன்பாப், விஜயலக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தை அப்படியே தமிழில் இயக்கியிருந்தார் சித்திக். இளையராஜா இசையமைத்தார். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ப்ரண்ட்ஸ் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி நவம்பர் 21ம் தேதி ரீரிலீஸ் செய்கிறார்கள். அது குறித்த போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.