காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் காந்தாரா சாப்டர் 1. ருக்மணி வசந்த் நாயாகியாக நடித்துள்ள இந்த படம் இதுவரை 655 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தனது ஆன்மிக பயணத்தை துவங்கிய அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், 'தக்ஷன காசி' என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, புனித நகரங்களில் ஒன்றான காசிக்கு (வாரணாசி) பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். இதனையடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இவரின் ஆன்மிக பயணத்தில் இன்னும் சில கோவில்களுக்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.




