பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நடிகர் மணிகண்டன், நடன இயக்குனர் மற்றும் நடிகர் சாண்டி ஆகிய இருவரும் தமிழக அரசின் கலைமாமணி விருதை சில தினங்களுக்கு முன்பு பெற்றனர். பல வருடங்களாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சினிமாவுக்கு வாய்ப்பு தேடி அலைந்த காலத்திலிருந்து தற்போது வரை அவர்களது நட்பு இனிதாய் தொடர்கிறது. இருவரும் ஒரே நாளில் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளனர்.
அது குறித்து மணிகண்டன் இன்ஸ்டா தளத்தில், “நாங்கள் ஒரே கனவின் விதைகளை இரண்டு வெவ்வேறு மண்ணில் விதைத்தோம். நாங்கள் ஒரே அளவிலிருந்து தொடங்கினோம். ஆனால் வெவ்வேறு பாதைகளில் நடந்தோம். நாங்கள் எங்கள் கனவில் வேரூன்றி நீண்ட தூரம் வந்துள்ளோம். இன்று நாங்கள் இந்த மேடையில் ஒன்றாக நிற்கிறோம்... வெற்றியின் ஒளியில் கலைமாமணி விருதைப் பகிர்ந்து கொண்டு எங்கள் பயணங்கள் வெவ்வேறு, ஆனால் இலக்கு ஒன்று. காலம் நமக்கு நினைவூட்டுகிறது ... நட்பு தூரத்தால் அல்லது போராட்டங்களால் மங்காது, அனைத்தின் மூலமாக…..” என்று தன்னம்பிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
மணிகண்டன் தமிழ் சினிமாவில் சமீப காலமான நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து முன்னேறி வருகிறார். சாண்டி, நடன இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்து வருகிறார். 'கூலி' படத்தில் 'மோனிகா' பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். 'லோகா' படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.




