பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் |

2019ல் வெளியான 'ஒந்த் கதே ஹெல்லா' கன்னடப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். 2021ல் வெளிவந்த 'டாக்டர்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் 'எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், பிரதர்,' ஆகிய படங்களில் நடித்தார்.
தெலுங்கில் 'கேங் லீடர்' படத்தில் நானியின் ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் 'ஸ்ரீகாரம், சரிபோத சனிவாரம்' ஆகிய படங்களில் நடித்தார். பவன் கல்யாண் ஜோடியாக அவர் முதல் முறையாக நடித்த 'ஓஜி' படம் கடந்த வாரம் வெளியாகி 200 கோடி வசூலைக் கடந்தது.
அப்படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், “மிகவும் அர்த்தமுள்ள நினைவுகளின் சிறிய விஷயங்கள். எங்கள் படத்தின் மீது இவ்வளவு அன்பை பொழிந்ததற்கு அனைவருக்கும் நன்றி. எங்கள் இதயங்கள் நன்றியால் நிரம்பி வழிகின்றன. உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் எங்கள் படம் OG ஐ அனுபவியுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.