பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் |

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணம் ஆன பிறகும் கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பதை குறைக்கவில்லை.
தற்போது தெலுங்கில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா 'ரவுடி ஜனார்த்தன்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த படத்தில் ஒரு லிப் லாக் காட்சி உள்ளதால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ருக்மணி வசந்த். அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் லிப் லாக் காட்சிக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.