Advertisement

சிறப்புச்செய்திகள்

பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் | தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் யு-டியூப்பில் வெளியாகிறது | 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன் | பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம் | பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர் | 'தாய் கிழவி' துவங்கும் முன்பே, அடுத்த படத்திற்கும் இயக்குனரை முடிவு செய்த சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு 'டாக்சிக்' மூலம் 'டானிக்' தரும் தயாரிப்பாளர் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா 'மெஹந்தி' நிறைவு | நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் | வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செப்டம்பர் இறுதி வார ஓடிடி ரிலீஸ்..... பெரிய லிஸ்ட் இருக்கு....!

25 செப், 2025 - 01:55 IST
எழுத்தின் அளவு:
This-week-OTT-list
Advertisement


வார இறுதி வந்து விட்டது....அதேபோல் சினிமா ரசிகர்களைக் குதூகலிக்கும் விதமாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் புதுப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவை எந்த மாதிரியான படங்கள், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஹிருதயபூர்வம்


இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில், நடிகர் மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஓணம் பண்டிகை தினத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஹிருதயபூர்வம்'. இருதய மாற்று அறுவைசிகிச்சை மூலம் இதயத்தைத் தானமாகப் பெறும் மோகன்லால், இரண்டு அன்புக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ரூ.12கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த திரைப்படம் நாளை (செப்.26) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஓடும் குதிர சாடும் குதிர


மலையாள நடிகர் பஹத் பாசில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஓடும் குதிர சாடும் குதிர'. ஓணம் பண்டிகையன்று வெளியான இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சர்கீட்


தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நடிகர் ஆசிப் அலி, நடிகை திவ்யா பிரபா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சர்கீட்'. திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சுமதி வளவு


நடிகர் அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் வெளிவந்த திரைப்படம் 'சுமதி வளவு'. த்ரில்லர் கதைக்களத்தை உள்ளடக்கி வெளிவந்த இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Meghalu Cheppina Prema Katha (மெஹலு செப்பினா பிரேமா கதை)


தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பீல் குட் திரைப்படமான'Meghalu Cheppina Prema Katha (மெஹலு செப்பினா பிரேமா கதை)'. நாளை(செப்.26ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Bhaava Theera Yaana (பாவா தீரா யன்னா)


கன்னட மொழியில் வெளிவந்த காதல் திரைப்படம் ' Bhaava Theera Yaana'. கன்னட ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Son of Sardaar 2 (சன் ஆப் சர்தார்-2)


இந்தி நடிகர் அஜய் தேவ்கான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளிவந்த இந்தி திரைப்படம் 'Son of Sardaar 2( சன் ஆப் சர்தார்-2). கமெடி திரைப்படமான இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன்நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி ... பைரசியை விட இவர்களை பார்த்தால் பயமாக உள்ளது : பிரேம் குமார் பைரசியை விட இவர்களை பார்த்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap