விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்' ரிலீஸ் ? | 'கருப்பு' வெளியான பிறகு திரிஷாவுக்கு டப்பிங் பேசிய தகவலை வெளியிட்ட சின்மயி | கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட் | காணாமல் போன மோகன்லால் பட இயக்குனர் ; புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார் | பாடகர் வேடனின் செயினில் இருப்பது புலிப்பல் தான் ; ஆய்வறிக்கை வெளியானதால் சிக்கல் | இத்தனை நாளாக செய்யாத ஒரு விஷயத்தை 'ஐ'ம் நோபடி' படப்பிடிப்பில் செய்த பார்வதி | ஆட்டோ டிரைவராக நடிக்க மறுத்தார்: கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மீது பசில் ஜோசப் குற்றச்சாட்டு | தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” |

தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், தூய தமிழ் உச்சரிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பசுபுலேட்டி கண்ணாம்பா. 'கிருஷ்ணன் தூது' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், 1942-ல் வெளியான 'கண்ணகி' படத்தில் கண்ணகியாக நடித்துப் புகழ் பெற்றவர். தமிழ், தெலுங்கில் 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பி.கண்ணாம்பா, 25 படங்களைத் தமிழ், தெலுங்கில் தயாரித்தும் இருக்கிறார்.
அவர் தயாரித்த படங்களில் ஒன்று, 'லக்ஷ்மி'. வில்லனாக நடித்து வந்த ஆர்.எஸ்.மனோகர், இதில் ஹீரோ. மனோகர் ஒரு சில படங்களிலேயே நாயகனாக நடித்துள்ளார். அதில் இந்த படம் முக்கியமானது. எல்.நாராயணராவ், சி.வி.வி.பந்துலு, எம்.சரோஜா, சந்திரபாபு, டி.ஆர்.ராமச்சந்திரன், சி.கே.சரஸ்வதி உட்பட பலர் நடித்தனர். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம் இயக்கினார் . 1953ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெறவில்லை.