தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் |

செப்.19ம் தேதியான நாளை முதல் ஓடிடி தளத்தில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த பட்டியலை மிஸ் பண்ணாமல் பாருங்க. உங்களுக்குப் பிடித்த தமிழ் மற்றும் பிறமொழி படங்களும், வெப் தொடர்களும் இடம்பெறவுள்ளது.
ஹவுஸ் மேட்ஸ்
சிவகார்த்திகேயனின் எஸ்.கே பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. இந்த படத்தை டி.ராஜவேல் இயக்க, காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கடந்த ஆக.1ம் தேதி திரையரங்கில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் நாளை(செப்.19ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
போலீஸ் போலீஸ்
சுஜிதா தனுஷ், மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன் தங்கவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் தொடர் 'போலீஸ் போலீஸ்'. காவலர் ஒருவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைத் திரைக்கதையாக அமைத்து இந்த வெப் தொடர் வெளியாகவுள்ளது. இந்த தொடர் நாளை(செப்.19ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இந்திரா
சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரீன், அனிஹா, கல்யான் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் இந்திரா'. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் ஆக.22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த திரைப்படம் நாளை(செப்.19ம்தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இஸ் சீசன்-2
'இஸ்' வெப் தொடரின் இரண்டாவது சீசன், நாளை(செப்.19ம் தேதி) நாளை ஆஹா ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த வெப் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரவுள்ளது.