அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் | இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்? | மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ் | கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? | 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு | கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா | தமிழகத்தில் ‛கருப்பு' படத்தை பார்த்த ஒரு கோடி பேர் | ஜூன் 15ல் ஓடிடியில் வெளியாகும் ‛கெணத்த காணோம்' | முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆர்.ஜே.பாலாஜி |

நடிகர் திலகம் சிவாஜி அபூர்வமாக சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் ஆகியவை முக்கியமான படங்கள், அதிகம் அறியப்படாத இன்னொரு படமும் உண்டு அது 'பெண்ணின் பெருமை'.
பெங்காலி எழுத்தாளர் மணிலால் பானர்ஜி எழுதிய 'ஸ்வயம்சித்தா'வை 'அர்தங்கி' என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார் புல்லையா. படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தமிழில் 'பெண்ணின் பெருமை' என்ற பெயரில் இயக்கினார்.
இதில் சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி, நாகையா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு உள்ளிட்ட பலர் நடித்தனர். பி.என்.ராவ், ஏ.ராமராவ் இசை அமைத்திருந்தனர்.
ஒரு ஜமீன்தாரின் முதல் தாரத்து மகனான ஜெமினி கணேசனை துன்புறுத்தும் இரண்டாவது தாரத்து மகனாக சிவாஜி நடித்தார். பல வழிகளில் அவரை துன்புறுத்தும் ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருந்தார்.
முன்பெல்லாம் வில்லன் என்றால் முறுக்கு மீசை, உருட்டும் கண்கள், கத்தி பேசும் வசனம் இதுதான் அடையாளமாக இருந்தது. இதனை முதலில் மாற்றியவர் சிவாஜி, சரித்திர படமான 'உத்தம வில்லனில்' ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். சமூக படங்களில் 'பெண்ணின் பெருமை'யில் ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான முதல் வில்லன் சிவாஜிதான்.




