பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் |

1980களில் இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது ஒரு ஹீரோவுக்கு முக்கியமான தகுதியாக இருந்தது. இரட்டை வேடங்களில் நடிப்பவர்கள் பெரிய ஹீரோக்களாக கொண்டாடப்பட்டார்கள். இதனால் எல்லா நடிகர்களுமே இரண்டு வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தார்கள் அதற்கான கதைகளை தேர்வு செய்து நடித்தார்கள்.
அந்த வரிசையில் விஜயகாந்த் இரண்டு வருடங்களில் நடித்த முதல் படம் 'ராமன் ஸ்ரீராமன்'. பிரசாத் டி.கே.இயக்கிய இப்படத்தை பாபு கே தயாரித்தார். விஜயகாந்த் ஜோடியாக ஜோதி நடித்தார். சிவாஜி ராஜா இசை அமைத்தார். சத்யராஜ் வில்லனாக நடித்தார். கவுண்டமணி அனுராதா வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோரும் நடித்தார்கள்.
இந்த படம் தவிர வானத்தைப்போல, தவசி, பேரரசு, மரியாதை, நல்லவன், கண்ணுபட போகுதய்யா, ராஜதுரை, உழவன் மகன், தர்மம் வெல்லும் உள்பட பல படங்களில் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்தார்.




