விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

காதல் தோல்வி படங்களுக்கு இப்போதும் லேண்ட்மார்க்காக இருக்கும் படம் 'தேவதாஸ்'. மேற்கு வங்காள இயக்குனர் செப்டோபாத்தியாயா எழுதிய நாவல் தான் 'தேவதாஸ்'. 1937ம் ஆண்டு முதல் 'தேவதாஸ்' படம் வெளியானது. ஆனால் அப்போது அது பெரிதாக பேசப்படவில்லை.
1953ம் ஆண்டு வெளிவந்த 'தேவதாஸ்' படமே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. வேதாந்தம் ராகவய்யா இயக்கினார். வினோதா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் டி.எல். நாராயணா தயாரித்தார். இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.
ஒரு நிலப்பிரபுவின் மகனான தேவதாஸ், ஏழைப் பெண் பார்வதியைக் காதலிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, தேவதாஸ் தனது காதலி பார்வதியை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. அதோடு பார்வதி ஒரு வயதானவரை மணக்கிறார். பார்வதியை மறக்க முடியாமல், தேவதாஸ் குடிகாரராக மாறுகிறார். இதுதான் தேவதாஸ் படத்தின் கதை.
முதலில் இந்தப் படத்தை வினோதா பிக்சர்ஸ் தயாரிக்க, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் சவுகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் தொடங்கியது. தேவதாஸாக அக்கினி நாகேஸ்வரராவும், பார்வதியாக சவுகார் ஜானகி நடித்தனர். ஒரு வார படப்பிடிப்புக்குப் பிறகு, அத்தகைய கதை தெலுங்கில் வெற்றிபெறாது என்ற பார்வையின் காரணமாக படம் கைவிடப்பட்டது.
சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படம் துவங்கப்பட்ட போது தேவதாசாக அக்கினினேனி நாகேஸ்வரராவ் நடித்தார். பார்வதி கேரக்டருக்கு சவுகார் ஜானகி பொருத்தமாக இல்லை என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் அவருக்கு பதிலாக சாவித்திரியை தேர்ந்தெடுத்தார். இவர்கள் தவிர தெலுங்கு பதிப்பிற்கு தெலுங்கு நடிகர்களும், தமிழ் பதிப்பிற்கு தமிழ் நடிகர்களும் நடித்தனர்.




