ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

வீர தீர சூரன் படத்திற்கு பின் விக்ரமின் அடுத்த படங்களில் குழப்பம் நீடிக்கிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரமின் 63வது படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. சில பிரச்னையால் இந்தபடம் வளரவில்லை. அடுத்து விக்ரமின் 64வது படத்தை பிரேம் குமார் இயக்குவதாக அறிவித்தனர். இப்போது அதுவும் தள்ளிப்போகும் என தெரிகிறது.
இந்த நிலையில் விக்ரமின் 63வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, ‛ராட்சசன்' இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார் என்கிறார்கள். மேலும், விக்ரமின் 64வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஷ்ணு எடவன் இயக்கவுள்ளார். இவை அல்லாமல் விக்ரமின் 65வது படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.




