நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் | நுரையீரல் பிரச்னை : கன்னட நடிகை ரஷ்மி லீலா மரணம் | நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி | 'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? |

மு.மாறன் இயக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார் 'ரோஜாக்கூட்டம்' ஸ்ரீகாந்த். அவர் ஜோடியாக பிந்துமாதவி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு, புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டாலும், ஸ்ரீகாந்த் கலந்து கொள்ளவில்லை.
போதை மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக ஜெயிலுக்கு போய் ஜாமினில் வந்தவர், குற்ற உணர்வு, பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயங்குகிறார். ஜாமினில் வந்தவர் மற்ற பொது நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. அவர் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன.
கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. கடந்த ஆண்டு அவர் நடித்த 'தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என 2 படங்கள் வந்தன. இரண்டுமே பிளாப். அதனால், ஹீரோ அல்லாத ரோலில் அவர் நடிக்க ஆரம்பித்தார். அதற்குள் போதை பிரச்னையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் என்கிறார்கள் கோலிவுட்டில்.




