கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மதராஸி'. இப்படம் இரண்டே நாட்களில் 50 கோடி வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. ரசிகர்களிடமும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஏஸ்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வெளியான இரண்டாவது படம் 'மதராஸி'. அவர் அறிமுகமான 'ஏஸ்' படம் தோல்வியடைந்த நிலையில், 'மதராஸி' வெற்றி பெற்றது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில், “மாலதியாக நடித்தது மிகவும் பலனளிக்கும் மற்றும் மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு முதல் இறுதி ஷாட் வரை, இந்த கதாபாத்திரம் எனக்கு ஆராயவும், சிரிக்கவும், கற்றுக்கொள்ளவும், ஒரு புதிய அனுபவத்தை வாழவும் அனுமதித்தது.
இந்த பயணத்தை இவ்வளவு திறமையான நடிகர்கள் மற்றும் அற்புதமான ஆதரவு அளிக்கும் குழுவினருடன் பகிர்ந்து கொண்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இத்தகைய அருமையான மனிதர்களுடன் இணைந்து பணியாற்றியது ஒரு பாக்கியமாகும்.
இப்போது, மதராஸி இறுதியாக உங்கள் அனைவருக்கும் அனுபவிக்க திரையரங்குகளில் வந்துவிட்டது. மாலதியிடமிருந்து (மற்றும் ருக்மிணியிடமிருந்தும்) உங்களுக்கு அன்பும் நன்றியும் அனுப்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.




