உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்' | 'பிளடி பாலிடிக்சில்' வெல்வாரா அஞ்சனா நேத்ரன் | பிளாஷ்பேக் : நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மனோரமா | பிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த நடிகை | 20 ஆண்டுகளாக வெற்றிக்கு காத்திருக்கும் பிரஜின் | ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம் | அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர் | சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' |

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இந்த படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதற்கிடையில் விஷால், தன்ஷிகா திருமண நிச்சயம் நடைபெற்றது. இன்னும் இரண்டு மாதங்களில் திருமண விழாவை முடிவு செய்துள்ளனர். இதனால் மகுடம் படத்தில் விஷால் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை இந்த இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.




