பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் நடிகர் அஜய் நடிக்கும் புதிய படம் ‛பூக்கி'. இதை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். சென்னையில் நடந்த பூக்கி பட பூஜையில் சம்பந்தம் இல்லாமல் அரசியல் பேசியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். அதில் அவர் பேசியதாவது, ''சமீபத்தில் ஒரு மாநாட்டை டிவியில் பார்த்தேன். நம் இளைஞர்கள் இன்னும் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறார்களோ என தோன்கிறது. காரணம், காலை முதல் அந்த மாநாட்டில் வெயிலில் கருகி போகிறார்கள். மேடையில் இருந்து துாக்கி வீசப்படுகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களை நாம் சரியாக வழி நடத்தவில்லை. அவர்களை கவர தவறிவிட்டோம். அவர்களின் குரலை பேச தவறிவிட்டோம்.
குறிப்பாக, சினிமாவில் அந்த இளைஞர்களின் குரல், அவங்க மனசு பதிவாகவில்லையோ என்று தோன்றுகிறது. அவர்களுக்கு விருப்பமான படங்கள் வராமல், பான் இந்தியா படங்களாக நாம் எடுக்கிறோம் என்பதை அந்த கூட்டத்தை பார்த்தபோது எனக்கு தோன்றியது. அவர்கள் குரல் பேசப்பட வேண்டும். அவர்கள் உலகம் என்ன என்பது நாம் காண்பிக்கவில்லை. மலையாளம், கன்னட சினிமாவில் இளைஞர்களின் மனசு, உலகம், அவர்கள் மொழி, அவர்கள் காதலை பதிவு செய்கிறார்கள். தமிழில் அந்த நிலை இல்லை. இப்போது பூக்கி காதல் படமாக வருவது மகிழ்ச்சி'' என்று முடித்தார்.
இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கும், வசந்தபாலனுக்கும் சண்டை சச்சரவு இல்லை. எந்த அரசியல் கட்சியிலும் வசந்தபாலன் இல்லை. ஆனாலும், அரசியல் மாநாடு குறித்து, விஜய் பெயரை குறிப்பிடாமல் அவர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். தவிர, வசந்தபாலன் சொன்ன கருத்திலும் உண்மை இருக்கிறது.
நாம் ஹீரோயிச, ஆக் ஷன், பேய், காமெடி படங்களை எடுக்கிறோம். நல்ல காதல் படங்களை, யூத் படங்களை எடுப்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் யூத் ஹீரோக்களே குறைவு என்கிறார்கள் அந்த பேச்சை உன்னிப்பாக கவனித்தவர்கள்.