பிளாஷ்பேக்: குறைவான நாட்களில் தயாராகி நிறைவான வெற்றியைப் பதிவு செய்த “முகராசி” | ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் 'தம்பி' | 'ஜியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'புஷ்பா 2'வில் நடித்த காட்சிகள் இல்லை! - திவி வத்யா | மார்டன் வில்லி மகாலட்சுமி | பழிவாங்க முடிவெடுத்த தளபதி நடிகர் | விட்டதை வட்டியும் முதலுமாக வசூலிக்கும் அமரன் | கனடாவில் 'துரந்தர் 2' படம் திரையிட்ட தியேட்டர் ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள் | கஞ்சா வழக்கில் கைதான இயக்குனர் படத்தில் நடிப்பதா? மம்முட்டிக்கு நடிகர் ஹரீஷ் பெராடி கேள்வி |

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். தமிழில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'ஏஸ்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. பெரும் எதிர்பார்ப்பில் தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படத்தில் ஏமாற்றம்தான் கிடைத்தது.
அவரது இரண்டாவது தமிழ்ப் படமான 'மதராஸி' இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம். டிரைலரைப் பார்த்த போது ருக்மிணிக்கும் படத்தில் முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது தெரிகிறது.
முதல் படத் தோல்வியை மறக்கும் விதத்தில் 'மதராஸி' வெற்றி அவருக்கு அமைந்தால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் தேடிப் போகும். கன்னடத்தில் உருவாகி அக்டோபர் 2ல் வெளியாக உள்ள 'காந்தாரா சாப்டர் 1', தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'ட்ராகன்' படத்திலும், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும் ருக்மிணி வசந்த் தான் கதாநாயகி. அப்படங்களுக்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகையாக மாறிவிடுவார்.




