'திருமணம்' படத்துக்கு விருது இல்லை: இயக்குனர் சேரன் ஆதங்க பதிவு | இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகும் உயிர் உள்ளவரை உஷா | சந்தானத்தின் புதிய படம் பற்றிய தகவல் | மீண்டும் இணைந்த ‛ரவுடி பேபி' கூட்டணி | மமிதா பைஜூக்கு போட்டியா அனஸ்வரா ராஜன் | நம்பிக்கையுடன் காத்திருக்கும் நயன்தாரா | அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? |

நடிகர் அஜித் நடிப்பு தாண்டி கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த ஓராண்டாகவே பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். துபாய் ரேஸ் உள்ளிட்ட போட்டிகளில் இரண்டாவது, மூன்றாவது இடமும் பிடித்தார். தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது அவர்களிடம் பேசிய அஜித், ‛‛கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, என்னை பிரபலப்படுத்த வேண்டாம். இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாக கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸில் சாம்பியன் ஆவார்கள்'' என்றார்.
அஜித்தின் இந்த பேச்சு வைரலாகி உள்ளது. தன்னை விட கார் ரேஸில் அவர் கொண்ட காதல் எவ்வளவு என்பதை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.