என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் | 'விஸ்வரூபம்' படத்தின் கதையை சொல்ல முடியாமல் போனது வருத்தம்! - செல்வராகவன் | மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும் திரை வாழ்க்கையும் | பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே காலமானார் | 'ஜனநாயகன்' லீக், சைபர் கிரைம் விசாரணை ஆரம்பம் | பிஸியான நடிகையாக கயாடு லோஹர் | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சிகிரி சிகிரி' பாடல் |

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. லடாக்கில் பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மாதவன் தற்போது லடாக்கில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டிருப்பதாவது: ''லடாக் வரும்போது எல்லாம் இதுபோன்று சிக்கிக் கொள்கிறேன். 2008ம் ஆண்டு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது பனிப்பொழிவில் சிக்கினேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் லே பகுதியில் சிக்கியுள்ளேன். இங்கு விமானங்கள் இல்லை.
கடந்த நான்கு நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமானங்கள் இல்லாததால் என்னால் ஊர் திரும்ப முடியவில்லை. விரைவில் வானம் தெளிவாகும். வீடு வந்து சேருவேன்", என்று குறிப்பிட்டுள்ளார்.