அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் |

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஷரிதா ராவ். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். ‛ஆற்றல், படவா, தேடி தேடி பார்த்தேன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கதையின் நாயகியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இதில் அவர் அறிமுக நடிகர் ராஜ் அய்யப்பா ஜோடியாக நடிக்கிறார். ராஜன் ரவி இயக்குகிறார். மிஸ்டர் பிக்சர்ஸ ஸ்டூடியோ சார்பில் ஜெயலட்சுமி, காந்தாரா ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. பிரேம்ஜி, ஸ்ரீநாத், சவுந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். கிரண்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், பாலா சுப்ரமணியன் இசை அமைக்கிறார். பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்கியது.




