விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? | மே 29ல் ஓடிடி.,யில் வெளியாகும் ‛லீடர்' | சக்தி வாய்ந்த வேடம்: ‛பெத்தி' படம் குறித்து சிவராஜ் குமார் தகவல் | கார்த்தி 49வது பிறந்தநாளில் வெளியான 'சர்தார்-2, மார்ஷல்' பட போஸ்டர்கள்! |

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் சிம்ரன். ரஜினிகாந்த்துடன் 'பேட்ட' படத்தில் இணைந்து நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
ரஜினியை தற்போது சந்தித்துப் பேசியுள்ளார் சிம்ரன். அந்த சந்திப்பு குறித்து, “சில சந்திப்புகள் காலமற்றவை. நமது சூப்பர்ஸ்டாருடன் ஒரு அழகிய தருணத்தை செலவிட்டேன். 'டூரிஸ்ட் பேமிலி' மற்றும் 'கூலி' வெற்றி இந்த சந்திப்பை மேலும் சிறப்பாக்கியது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிம்ரன் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் நல்ல வசூலைக் குவித்து, மிகவும் லாபகரமான படமாக அமைந்தது. ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளியான 'கூலி' படமும் 400 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.




