தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் | ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் |

மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் 2014ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. பாலா தயாரித்த அந்த படத்தில் நாகா, பிரயாகா நடித்தனர். அடுத்ததாக பிசாசு 2வை தொடங்கினார் மிஷ்கின். ஆண்ட்ரியா முதன்மை கேரக்டரில் நடித்தார். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்தது. நிதி பிரச்னையால் சில ஆண்டுகளாக இந்த படம் ரிலீஸாகாமல் முடங்கிபோய் இருக்கிறது. படத்தை ரிலீஸ் செய்ய சிலமுறை எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் பிசாசு 2 எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்கு ‛‛தயாரிப்பாளராக இருந்தால் அந்த படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே நான் ரிலீஸ் செய்து இருப்பேன்'' என்று ஆண்ட்ரியா கூறி இருக்கிறார்.
‛பிசாசு 2'-வை முடித்துவிட்டு விஜய் சேதுபதி நடிக்கும் ‛டிரெயின் 2'-வை முடித்துவிட்டு இப்போது டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் மிஷ்கின். ‛பிசாசு 2' படத்தில் சில காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தார் என்று கூறப்பட்டது. அதை மிஷ்கின் நீக்கிவிட்டார். இந்தப்படம் மட்டுமல்ல, கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி படமும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகவில்லை.




