சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படமாக 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, சிவதா , யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க சிம்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்த கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு தற்போது வட சென்னை பின்னணியில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். அதை முடித்ததும் பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவர் நடிப்பில் இன்னும் இரு படங்கள் உள்ளன.