பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

பொதுவாக, சினிமாவில் ஒரு கட்டத்துக்குபின் ஹீரோயின்களுக்கு மார்க்கெட் போய்விடும். தொடர்ச்சியாக தோல்வி படம் கொடுத்தாலோ, திருமணம் ஆனாலோ, சர்ச்சை, பந்தாவில் சிக்கினாலோ அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிலருக்கு வயதாகிவிட்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காது.
அப்படிப்பட்டவர்களில் கொஞ்சம் பெரிய ஹீரோயின்கள் என்றால், அந்த காலகட்டங்களில் 'கதை நாயகியாக' அதாவது, ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பது வழக்கம். சின்ன ஹீரோயின் என்றால் வில்லியாக, குணசித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நடிகை அனுஷ்கா இப்போது காட்டி என்ற படத்தில் பக்கா ஆக் ஷன் ரோலில் நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணனும் இருக்கிறார்கள்
சிம்ரனும் தி லாஸ்ட் ஒன் படத்தில் ஆக் ஷனுக்கு மாறியிருக்கிறார். ரிவால்வர் ரீட்டாவில் கீர்த்தியும் துப்பாக்கி வைத்து சண்டைபோடுகிறார். ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் ஹன்சிகா கடுமையாக சண்டைபோட்டு இருக்கிறார். நயன்தாராவும், திரிஷாவும் திரில்லர், ஆக் ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான உசுரே படத்தில் வில்லியாக நடித்தார் மந்த்ரா. விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்த ரெஜினா அந்த மாதிரி ரோலில் மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.




