உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'பராசக்தி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த டைட்டிலை வைப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி உரிமம் பெற்ற ஆதாரங்களை வெளியிட்ட பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதே போன்று 40 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரச்னை உருவானது. 1985ம் ஆண்டு 'பராசக்தி' என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. ஏ ஜெகநாதன் இயக்கினார். சிவக்குமார், நளினி, ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தாமரை உட்பட பலர் நடித்தனர். ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது.
1952ம் ஆண்டு சிவாஜி நடித்த ‛பராசக்தி'யின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் பராசக்தி என்கிற டைட்டிலை வைக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் படத்தின் தலைப்பை 'மீண்டும் பராசக்தி' என்று மாற்றப்பட்டு படம் வெளியானது.