சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இதை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திற்கு இசையமைக்க அனிரூத் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை ஸ்ரீலீலா உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சுவாசிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள்.




