மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் |

இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படங்களுக்கு பெயர் போனவர். ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழில் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கடந்த சில வருடங்களாக ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநர் ஆக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குநர் சிவா என்பவர் இயக்குகிறார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.