ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 2015ல் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 10 வருடங்களில் அவர் நடித்த 9 படங்கள் மட்டுமே வெளிவந்தன. அவற்றில் தமிழ், தெலுங்கில் தயாரான 'தோழா, பாகமதி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வரவேற்பைப் பெற்றன.
அவர் நடித்து கடைசியாக 2023 செப்டம்பரில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்' படம் வெளிவந்து வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அவர் 'காட்டி' தெலுங்குப் படத்தில் நடித்து வந்தார். கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள ஒரு படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'கதனார்' படம் வர உள்ளது.




