ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கி பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் மதன் பாப். சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், மேடை நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் என பலவற்றிலும் அசத்தி உள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், நேற்று மாலை அடையாறில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.




