
ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...!
ரஜினியும், லோகேசும் முதன்முறையாக இணைந்து இருக்கிறார்கள். லியோ படத்துக்குபின் கூலி வருவதால், லோகேசும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். கமலுக்கு விக்ரம் என்ற ஆக் ஷன் படத்தை கொடுத்தவர், ரஜினிக்கு அதை விட பலமடங்கு பெரிய ஆக் ஷன் கதையை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்போதே கூலி குறித்து ஆங்காங்கே பேசி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால், எந்த பேச்சிலும் அவர் கூலி கதையை, அதன் கருவை சொல்லவில்லை.
ஆகஸ்ட் 2ம் தேதி டிரைலர் வருகிறது. அப்போது ஒரளவு கதை தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. தங்கம் கடத்தல், தாதாயிசம் பின்னணியில் ஒரு பழிவாங்கும் கதையாக கூலி இருக்க வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் எமோஷனும் இருக்கிறதாம். கிட்டத்திட்ட விக்ரம் பாணியிலான அதிரடி ஆக் ஷன் தான் கூலி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் பெரிய பட்ஜெட்டில் பல மொழி ஸ்டார்களை வைத்து உருவாக்கி இருப்பதால் கூலியில் எதிர்பார்ப்பதை விட ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அதெல்லாம் சஸ்பென்ஸ் என்று லோகேஷ் தரப்பு சொல்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!