'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

தனது திருமணத்தை சமீபத்தில் அறிவித்த தன்யா ரவிச்சந்திரன், சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் 'றெக்கை முளைத்தேன்'. கடந்த ஆண்டு வெளியான 'ரசவாதி' படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம். பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கி உள்ளார். இவர் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம்டா படங்களை இயக்கியவர். தரண் குமார் பின்னணி இசை அமைக்கிறார், தீசன் பாடல்களுக்கு இசை அமைக்கிறார், கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் பிரபாகரன் கூறும்போது "இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் 'றெக்கை முளைத்தேன்'. கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்ததாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இருக்கும்," என்றார்.




