காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

'திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை' படங்களை அடுத்து விஜய் சேதுபதியுடன் 'தலைவன் தலைவி', தனுசுடன் 'இட்லி கடை' படங்களில் நடித்து முடித்திருக்கிறார் நித்யா மேனன். இதில், தலைவன் தலைவி படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு தகவல் வெளியிட்டார் நித்யாமேனன்.
அதாவது, ''நான் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது என் அம்மா வேலைக்கு சென்று விட்டதால், என் பாட்டிதான் என்னை வளர்த்தார். சிறுவயதிலிருந்தே நான் தனிமையைதான் அதிகமாக விரும்பி வந்தேன். வளர்ந்த பிறகு காதல் அனுபவம் ஏற்பட்டது. என்றாலும் அந்த காதல் எனக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வலியைத்தான் கொடுத்தது. காதலில் விழுந்த போதெல்லாம் என் இதயம் உடைந்து போனது. நான் விரும்பிய அழகான ஒரு வாழ்க்கை இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதனால் இப்போது காதல் உணர்வுகளிலிருந்து வெளியே வந்து விட்டேன்.
என்னுடைய சினிமா பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன். ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்டுகிறேன். அதே சமயம் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆத்மார்த்தமான ஒரு துணை கிடைத்தால் அப்போதே திருமணம் செய்து கொள்வேன். என்றாலும் எனக்கு இப்போது நான் இருக்கும் தனிமையான வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இதை நான் ரசித்து வாழ்ந்து வருகிறேன்,'' என்கிறார் நித்யா மேனன்.




