விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணப் பதிவு 36 மில்லியன் லைக்ஸ் | மார்ச் 6ல் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமணம் | காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் |

சென்னை: புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
புதிய படத்தில் நடிப்பதற்காக, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நடிகர் ரவி மோகனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தது. 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை நிறுவனம் தொடங்கவில்லை. கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டது. பட தயாரிப்பு நிறுவனம் 9 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு ரவி மோகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தயாரிப்பு நிறுவனமான பாபி டச் கோல்டு யுனிவர்சல் சார்பில், நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 'இந்த பிரச்னையில் நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப அளிப்பதில் என்ன சிரமம் உள்ளது. இதனால் எதிர்மறையான விளம்பரம் தான் கிடைக்கும்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, 'ரவி மோகன், ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இரு தரப்பிற்கு இடையேயான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்தும் கோர்ட் உத்தரவிட்டது.




