தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

தமிழ் சினிமாவில் 90, 20 ஆரம்ப காலகட்டத்தில் ‛ஆக்சன் கிங்' ஆக வலம் வந்தவர் அர்ஜூன். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களாக அர்ஜுன் கதாநாயகனாக நடிக்காமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் மீண்டும் புதிதாக உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் என்பவர் இயக்குகிறார்.
இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‛விருமாண்டி' அபிராமி நடிக்கவுள்ளார். இவர்களுக்கு மகள் கதாபாத்திரத்தில் ‛ஸ்டார்' படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.