இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 என்ற படத்தில் இயக்குனரானவர் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தவர், பின்னர் தமிழில் அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். அடுத்தபடியாக மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அந்த முடிவை பிரேம்குமார் மாற்றியுள்ளார். அவரது அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப் போகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் தனது 63வது படத்தில் நடித்து வரும் விக்ரம், அந்த படத்தை முடித்ததும் பிரேம்குமார் இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.




